பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து.. திருவனந்தபுரத்தில் பரபரப்பு..!
Trivandrum massive fire brokes At Godown
பழைய பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆக்கர் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் குடோனில் இன்று பகல் 12 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் நிறைய வணிக வளாகங்கள் , கடைகள் அதிகம் உள்ளது.
இதனால், தீ மளமளவென பரவி அருகில் உள்ள உணவகம் ஒன்றிலும் படர்ந்தது. இதுகுறித்து தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. தீவிபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவரங்கள் வெளிவர வில்லை. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
English Summary
Trivandrum massive fire brokes At Godown