ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் - காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள, ஃபரிதாபாத் நகரில் இருந்து ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் ஏசி கோச் ஒன்றில் பாவ்னா என்ற பெண் ஒருவர், தனது உடமைகளுடன் ஏறி பயணம் செய்து வந்துள்ளார். இவர், முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஜெனரல் டிக்கெட் எடுத்து, அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் போவதற்கு முன்னதாக ரயில் புறப்பட இருந்ததால், அவசர அவசரமாக ஏசி கோச் ஒன்றில் ஏறி இருக்கிறார். 

தவறான கோச்சில் பாவ்னா ஏறியதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பாவ்னாவிடம், உடனடியாக ரயிலை விட்டு கீழே இறங்கி அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு பாவ்னா, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி போவதாகவும், தேவைப்பட்டால் இதற்கான அபராதத்தை செலுத்துவதாகவும் கூறியுள்ளார். 

இருப்பினும் டிக்கெட் பரிசோதகர் பாவ்னா உடமைகளை தூக்கி வெளியே எறிந்ததுடன் அவரையும் பிடித்து வெளியே தள்ளி விட்டுள்ளார். இதனால், நிலைதடுமாறிய பாவ்னா ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டிருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

பாவ்னா கீழே விழுந்ததில், அவருடைய தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, போலீசார் தப்பியோடிய டிக்கெட் பரிசோதகரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttr push woman at out of train in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->