வெறுப்புடைய பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் சேனல்கள்.. அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன ? - உச்சநீதிமன்றம் - Seithipunal
Seithipunal


இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான கே.எம். ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவிக்கும்போது, தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்களில், தொகுப்பாளர்களின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி தொகுப்பாளரின் பங்கு கொஞ்சம் சிக்கல் உடையது ஆகும்.

அதேபோல், நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்புடைய பேச்சை பேசாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை தொகுப்பாளர்களுக்கு உள்ளது.

நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் எவரேனும் வெறுப்புடைய பேச்சை தொடங்குகிறார் என்று தெரிந்தால் தொகுப்பாளர் உடனடியாக அந்த நபரை பேச்சை தொடர அனுமதிக்க விடாமல் இருப்பதுவே தொகுப்பாளரின் பணியாகும். 

இதுபோன்ற வெறுப்புடைய பேச்சுகள் சமூக ஊடகம் போன்றவற்றில் வெளிவரும்போது அவை சரிப்படுத்தப்படுத்தப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

வெறுப்புடைய பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் தொலைக்காட்சி சேனல்கள் எந்தவித தடைகளும் இல்லாமல் தப்பித்துவிடுகின்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசு ஏன் ஊமை பார்வையாளராக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tv channels hate speech allowed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->