தமிழகத்தில் CAA சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் - தவெக தலைவர் விஜய் கண்டனம்.!
tvk leader speech about CAA
பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, குடியுரிமை (திருத்தம்) சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த சட்டத்திற்கான விதிகளை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுளள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசை ஒப்புக்கு கூட விமர்சிக்காமல் மேலோட்டமாக அறிக்கை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
English Summary
tvk leader speech about CAA