மும்பை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் எத்தியோபியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து விமானம் ஒன்று மும்பையில் தரை இறங்கியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது இரண்டு பயணிகளின் உடைமைகளில் சுமார் 1,970 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் இருந்துள்ளது. அதனை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். 

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகமது இம்ரான் மற்றும் சையத் ஹசேன் என்பதும், இவர்கள் ஏற்கனவே துபாய் மற்றும் அடிஸ்அபாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததும், தற்போது போதைப்பொருள் கடத்தி வந்தபோது போலீசில் சிக்கி கொண்டதும் தெரியவந்தது.  

மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மோரிஸ் என்பவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty crores drugs seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->