சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டம் சவதத்தி தெரதகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மவுலா ஷாப். தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த ஐந்து வயது சிறுமியை கடத்தி சென்று அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக தாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மவுலா ஷாப்பை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கதக் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அதில், சிறுமியை கடத்தி சென்று, மயக்க மருந்து கொடுத்து மவுலா ஷாப் பலாத்காரம் செய்து இருப்பதுடன், கொலை செய்ய முயன்றதும் நிரூபணமாகி உள்ளது. அதனால் அவருக்கு போக்சோ சட்டத்தின்படி இருபத்தைந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty five years jail penalty to man for sexuall harassment in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->