குழந்தையின் கண்முன்னே தாய்க்கு பாலியல் தொல்லை - 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


குழந்தையின் கண்முன்னே தாய்க்கு பாலியல் தொல்லை - 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தினருக்கும், இந்து மதத்தினருக்கும் இடையே மத கலவரம் நடந்தது. இந்தக் கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவரத்தின் போது புவனா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவரின் மூன்று மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் குழந்தையைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, அந்த இஸ்லாமியப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து, முசாபர் நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவும் செய்தனர்.

பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போதே குற்றவாளிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதனால், இந்த வழக்கை விசாரணை செய்து விரைவில் முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் முசாபர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.

அதன் படி இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இதில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் உயிரோடு உள்ள இருவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty years jail penalty to accuest for sexuall harassment case in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->