மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை.!! கண்டுகொள்ளாத தாய் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை.!! கண்டுகொள்ளாத தாய் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாயுடன் படுத்து தூங்கிய சிறுமியை அவரது தந்தை கற்பழிக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்து பயந்து போன சிறுமி சத்தம் போட முயன்றபோது அவரது தந்தை சிறுமியின் வாயை பொத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாயும் எழுந்துள்ளார்.

ஆனால், அவர் கணவரின் செயலைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சம்பவம் குறித்து பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். 

அதன் படி போலீசார், சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசுக்கு தெரிவிக்காமல் இந்தக் குற்றத்தை மறைத்த தாய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு மும்பை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி விசாரணை செய்ததில், சிறுமியின் தந்தை மீதான குற்றம் நிரூபணம் ஆனது. 

இதையடுத்து நீதிபதி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், குற்றத்தை மறைத்த காரணத்திற்காக சிறுமியின் தாய்க்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty years prison to man for sexuall harassment to daughter in mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->