கேரளாவில் 6 நாட்களில் ரூ.2.7 கோடி வசூல் செய்து வந்தே பாரத் ரெயில் சாதனை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் 6 நாட்களில் ரூ.2.7 கோடி வசூல் செய்து வந்தே பாரத் ரெயில் சாதனை.!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு முதல்முறையாக வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி வைத்தார். 

இந்த ரெயில் இயக்கப்பட்ட முதல் 6 நாட்களில் மட்டும் ரூ.2.7 கோடி வசூல் செய்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான பயணத்தின் மூலம் ரூ.1.17 கோடியும், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான பயணம் மூலம் ரூ.1.10 கோடியும் கிடைத்துள்ளது. 

1128 இருக்கைகள் உள்ள இந்த ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சாதாரண இருக்கை வசதியில் பயணம் செய்ய ரூ.1590 கட்டணமாக பெறப்படுகிறது. அதேபோல், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய ரூ.2880 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது  

இதற்கான முன்பதிவு தொடங்கிய நாள் முதல் அனைத்து பயணசீட்டுகளும் உடனுக்குடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருகிற 14-ந் தேதி வரை உள்ள அனைத்து பயணசீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two crores money collection of vande barath train in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->