அமலுக்கு வந்தது புதிய சட்டம்.!! மகிழ்ச்சியில் பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


அமலுக்கு வந்தது புதிய சட்டம்.!! மகிழ்ச்சியில் பெண்கள்.!!

புதுவையில் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வருவதில் இரண்டு மணி நேரம் தளர்வு என்ற சலுகையை புதுச்சேரி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி இருவரும் ஒப்புதல் அளித்தனர்.

அந்த ஒப்புதலின் படி, அரசுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் வேலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, எட்டு மணி நேரத்திற்கு பதிலாக ஆறு மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்றும், இந்த சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த சிறப்பு அனுமதி பெண்கள் மட்டும் பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் வழங்கலாம் என்றும் மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை பணியில் பணிபுரிவோருக்கு சிறப்பு அனுமதி பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி அரசுத் துறையில் பணிபுரியும் ஏரளமான பெண்கள் இதனை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே புதுவையில் தான் முதல் முதலாக இப்படி ஒரு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two hours relaxation of work to woman in puthuchery from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->