அருணாச்சல பிரதேசத்தில் 254 செல்போன் கோபுரங்கள் திறப்பு.! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசத்தில் 254 செல்போன் கோபுரங்கள் திறப்பு.!

அருணாசலபிரதேசம் மாநிலத்தில், ரூ.2 ஆயிரத்து 675 கோடி செலவில், 3 ஆயிரத்து 721 கிராமங்களுக்கு 4ஜி தகவல் தொடர்பு வசதி அளிப்பதற்காக, 2 ஆயிரத்து 605 செல்போன் கோபுரங்கள் நிறுவுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல்கட்டமாக பி.எஸ்.என்.எல். சார்பில், 254 செல்போன் கோபுரங்கள் நிறுவும் பணி நிறைவடைந்து விட்டது. 

இந்த நிலையில், நேற்று இந்த கோபுரங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கலந்துகொண்டு கோபுரங்களை திறந்து வைத்தார். இவருடன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். 

இந்த செல்போன் கோபுரங்கள் மூலம் 336 எல்லையோர கிராமங்களுக்கு 4ஜி தகவல் தொடர்பு வசதி கிடைக்கும். அங்கு வசித்து வரும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலன் அடைவார்கள். இந்த கோபுரங்கள் மூலம் அதிவேக இணையவசதியை பெறலாம். 

சீனப்படையின் ஊடுருவல் அதிகம் இருக்கும் தவாங் மாவட்டத்தின் கிராமங்களுக்கும் இந்த வசதி கிடைத்துள்ளது. இதைதொடரந்து நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:- "இதற்கு முன்னதாக, ஒரு நேபாள நிறுவனத்தின் சிம்கார்டுகளையே பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படுத்தி வந்தனர். 

இதுகுறித்து பிரதமர் மோடியிடம் நான் சொன்ன பிறகு, இந்த வசதி கிடைத்துள்ளது. இன்னும் தகவல் தொடர்பு கிடைக்காத கிராமங்களுக்கு இந்த வசதியை அளிப்பதே எங்களுடைய இலக்கு" என்று அவர் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two hundrad and fifty four network towers open in arunachalpradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->