சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இரண்டு இந்திய வீரர்கள் தேர்வு! - Seithipunal
Seithipunal


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இரண்டு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ வெளியிட்ட அருகில் தெரிவித்துள்ளதாவது, மனித விண்வெளி விமான மையமும் அமெரிக்காவின் ஆக்சிங் விண்வெளி நிறுவனம் விண்வெளி விமான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா மிஷன் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4 வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தமும்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்திற்காக இந்தியாவின் தேசிய திட்டம் நிர்ணய வாக்கியம் இரண்டு விண்வெளி வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதல் வீரர்கள் குழு கேப்டனாக சுபான்சு சுக்லா மற்றும் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களுக்கான பயிற்சி இந்த வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் இந்திய ராணுவம் பெற்ற இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் சுபான்சு சுக்லா, பிரசாந்த் பாலகி கிருஷ்ண நாயர் ஆகியோர் இந்தியாவின் கதன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two Indian players selected to go to International Space Station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->