போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட 2.25 லட்சம் சிம்கார்டுகள் செயலிழப்பு.!
two lakhs twenty five thousand sim cards network close in bihar and jarkant
போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட 2.25 லட்சம் சிம்கார்டுகள் செயலிழப்பு.!
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அந்த புகாரின் படி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில், லட்சக்கணக்கான சிம்கார்டுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சிம் கார்டு மோசடிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் சிம்கார்டு எண்களை தொலைத்தொடர்பு துறை செயலிழக்க செய்துள்ளது.
இதில், பெரும்பாலான சிம் கார்டுகள் போலியான ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 517 இடங்களில் விதிகளுக்கு மாறாக சிம்கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சிம் விற்பனையாளர்களுக்கு தடை விதித்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமாக அல்லது போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளின் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்தில் எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
two lakhs twenty five thousand sim cards network close in bihar and jarkant