கேரளாவில் 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.!
two new ministers joining in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மெகா கூட்டணியில், ஜனநாயக கேரளா காங்கிரஸ், இந்திய தேசிய லீக், கேரளா காங்கிரஸ் (பி), காங்கிரஸ் (எஸ்) உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்பதால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு 2 பேருக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்ற 2 பேருக்கும் அமைச்சர் பதவி கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகள் ஜனநாயக கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆண்டனி ராஜுவும், இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த அகமது தேவர்கோவிலும் அமைச்சர்களாக இருந்தனர். இந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டதால் சமீபத்தில் இரண்டு பேரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து கேரளா காங்கிரஸ் (பி) கட்சியை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் (எஸ்) கட்சியை சேர்ந்த கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இன்று திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் முன்பு பதவி ஏற்றனர்.
English Summary
two new ministers joining in kerala