விமான நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றிய நபர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அந்தத் தகவலின் படி போலீசார் தனிப்படை அமைத்து விமானநிலையத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் ஒருவர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றி வருவது தெரிய வந்தது. 

உடனே போலீசார் அவரை பிடித்து உடமைகளை சோதனை செய்ததில் அவர் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புடைய 40 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கஞ்சா கடத்த உதவ முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் விமானநிலைய அதிகாரி உள்பட 2 பேரையும்  கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for kidnap kanja in tripura airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->