ஹத்ராஸ் சம்பவம் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுவது என்ன..?
U P Chief Minister Yogi Adhithyanath Speaks About Hathras Trag
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து உ. பி முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "இந்த சம்பவத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 6 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும் 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் தான் உள்ளனர்.
நாங்கள் முதலில் மீட்பு பணிகளில் தான் கவனம் செலுத்தி வருகிறோம். இந்நிகழ்ச்சியின் சொற்பொழிவாளர் கீழே இறங்கி வந்த போது கூட்டத்தினர் அனைவரும் அவரிடம் ஆசி வாங்க முண்டியடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாகத் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக, சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளோம். மேலும் நீதி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். மேலும் சம்பவ இடத்தில் காவல் துறை மூத்த அதிகாரிகளோடு 3 அமைச்சர்களும் முகாமிட்டுள்ளனர். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் " என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்குவதோடு, உயிரிழந்தோரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்" என்றும் உ. பி. முதல்வர் அறிவித்துள்ளார்.
English Summary
U P Chief Minister Yogi Adhithyanath Speaks About Hathras Trag