இந்தியாவில் உள்ள போலி பல்கலைகழகங்களின் பட்டியல் வெளியீடு - முதல் இடம் பிடித்த தலைநகர்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே அதிக போலி பல்கலைகழகங்கள்  டெல்லியில் இருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் இந்தியாவில் உள்ள போலி பல்கலைகழகங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதன்படி நாடு முழுவதும் டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் 21 பல்கலைகழக பட்டியல் வெளியிட்டப்பட்டது.

இந்த பட்டியலில் அதிக பட்சமாக தலைநகர் டெல்லியில் 8 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 4 பல்கலைகழகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த பல்கலைகழகங்கள் எந்த பட்டத்தையும் வழங்க முடியாது என மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UGC Realise the List of fake University in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->