பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளூர் மொழியில் தேர்வு எழுத அனுமதி - யுஜிசி - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளூர் அல்லது மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் பாடம் நடத்தப்பட்டாலும், தேர்வின் போது உள்ளூர் மொழிகளில் பதில் எழுத மாணவர்களை அனுமதிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. 

மேலும் பல்கலைக்கழகங்கள், பாடப்புத்தகங்களை தயாரிப்பதிலும், தாய்மொழி/உள்ளூர் மொழிகளில் கற்பித்தல்-கற்றல் செயல்முறையை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் மாநில மொழிகளில் பாடப்புத்தகங்களை எழுதுவது, கற்பித்தலில் அம்மொழிகளை பயன்படுத்துவது, வேறு மொழி பாடப்புத்தகங்களை தாய்மொழியில் மொழி பெயர்ப்பது ஆகியவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களது மாணவர்கள், தேர்வில் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UGC says University Allow students to write exams in local language


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->