கலப்படம் தொடர்பாக 71 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் - Seithipunal
Seithipunal


2022ஆம் ஆண்டு காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இதற்கு அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் கலப்படம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருந்துகளில் இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்தியா உலகிற்கு தரமான மருந்துகளை அளிக்கும் என உறுதியளிக்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் குறித்து குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 71 நிறுவனங்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில் 18 நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உயிரிழந்த குழந்தைகளின் மாதிரியை சோதித்த பொழுது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைக்கு யார் இருமல் மருந்தை பரிந்துரை செய்தது என கேள்வி எழுப்பியுள்ளோம். இது தொடர்பாக அந்நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இன்னும் பதில் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union health minister says Notice to 71 pharmaceutical companies regarding adulteration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->