ராகுல் காந்தியின் ஆணவத்தை அடக்குவோம் - பரப்பரப்பைக் கிளப்பிய அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா பேசியதாவது:- கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட வருகிற மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி சிறப்பாக செயல்படும். 

இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பாஜகவின் வெற்றிக்காக ஒவ்வொரு தொண்டனும் உழைக்கின்றனர். கடந்த 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேனனுக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே அமர்ந்துள்ளார். 

சரத் பவார் ஊழலை நிறுவனமயப்படுத்தினார். மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட தேர்தலில் வெற்றி பெற்று, ராகுலின் ஆணவத்தை நாங்கள் அடக்குவோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். 

நாம் கடினமாக உழைத்து, நமக்கு நாமே கடினமான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜக எழுச்சி பெற வேண்டும்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amithsha speech about ragul gandhi in bjp meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->