குவைத் செல்கிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


குவைத் நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்டதால், தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங் அவசர பயணமாக குவைத் புறப்பட்டு சென்றுள்ளார். தீ விபத்தில் இந்தியர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் உயிரிழப்புகளும் அரங்கேறியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போதிய உதவிகளை மேற்கொள்ள குவைத் புறப்பட்டு சென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister kv singh going to kuwait


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->