இந்தியாவிற்கு ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மூலம் ரூ 2.6 ட்ரில்லியன் வருவாய் கிடைத்துள்ளது - மத்தியமைச்சர் எல்.முருகன்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மூலம் ரூ 2.6 ட்ரில்லியன் வருவாய் கிடைத்துள்ளது - மதியமைச்சர் எல்.முருகன்.!

கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “சுமார் ஐம்பது மொழிகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்த  திரைப்படங்கள் கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறது. இதற்கு உதாரணமாக தற்போது ஆஸ்கார் விருது பெற்ற முதுமலையின் எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்திய திரைப்படங்களின் உள்ளடக்கம் உள்ளூரிலிருந்து உலக அளவிற்கு செல்லும் காலத்தை இந்தியா காண்கிறது. 

நடப்பாண்டில், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை அசாதாரணமாக 11.4% வளர்ச்சியடைந்து நாட்டிற்கு ரூ 2.6 ட்ரில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது . கொரோனா பெருந்தொற்றுக்கு பின், கடந்த ஆண்டு இந்தியாவின் திரைப்படத் துறை மூலமான வருவாய் 2021-ஐ விட மூன்று மடங்கு அதிகரித்து 1.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

இது 2025 -ல் மூன்று பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும். படப்பிடிப்பு, இணை தயாரிப்பு, அனிமேஷன், குறைந்த  செலவில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் உட்பட சர்வதேச திரைப்படத் தொழில்துறையை ஈர்ப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது” என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister L murugan speach in cans fil festivel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->