பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன்..!
Union Minister L Murugan visits family of Kerala man killed in Pahalgam terror attack to offer condolences
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியத்தில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ராமசந்திரன் என்பவரும் உயிரிழந்தார். தனது மகள் ஆர்த்தி உள்பட குடும்பத்துடன் காஷ்மீர் சென்றிருந்த நிலையில் அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்த ராமசந்திரனின் வீட்டிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று நேரில் சென்றுள்ளார். அங்கு அவர் ராமசந்திரனின் மகள் ஆர்த்தி உள்பட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மதியம் 01 மணிக்கு ராமசந்திரன் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் சுமார் 30 நிமிடம் குடும்பத்தினருடன் பேசியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Union Minister L Murugan visits family of Kerala man killed in Pahalgam terror attack to offer condolences