அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வு நடத்த திட்டமா? - மத்திய உள்துறை இணை அமைச்சர் விளக்கம்.!
Union Minister of Home Affairs ajaykumar mishra speach for ssc exam hindi language
மாநிலங்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா தெரிவித்ததாவது, "மத்திய அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்தியில் மட்டுமே தேர்வு நடத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை.
அதுபோன்று, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கும் திட்டமும் இல்லை. அதற்கான கேள்வியும் எழவில்லை. தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி வழி கல்வியை மட்டுமே ஊக்குவிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்ததாவது:- "கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஆறு ஆயிரத்து 677 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிறுவனங்கள், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் பதிவு செய்வதற்கான தகுதி இல்லை. நாட்டிலேயே அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 755 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மராட்டியத்தில் 734 நிறுவனங்களும், உத்தரபிரதேசத்தில் 635 நிறுவனங்களும் தங்களுடைய உரிமத்தை இழந்துள்ளன.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இரண்டு ஆயிரத்து 900-க்கு மேற்பட்ட மதக்கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Union Minister of Home Affairs ajaykumar mishra speach for ssc exam hindi language