கோயிலில் பக்தி பாடல் பாடி ரூ.10 காணிக்கை செலுத்தி ரூ.5000 ஆட்டய போட்ட கொள்ளையன்.!
Unknown person 5000 rupees robbery in Hariyana temple
கோயிலில் பக்தி பாடல் பாடி மர்ம நபர் ஒருவர் 5000 ரூபாய் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டத்திற்கு அருகில் உள்ள இந்துமத வழிபாட்டுத் தலமான அனுமன் கோயில் உள்ளது. இந்த வழிபாட்டுத்தளத்தில் நேற்று மாலை பக்தர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கோயிலில் உட்கார்ந்து பக்தி பாடல் பாடிக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்களாக பாடல் பாடிய அந்த நபர் சாமி சிலைக்கு முன்பு 10 ரூபாய் வைத்தார். அதன்பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் இன்று தான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Unknown person 5000 rupees robbery in Hariyana temple