மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்.. 11ம் வகுப்பு பள்ளி மாணவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளிகள் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டியூசன் முடிந்து தனது பள்ளி தோழியுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வாகனத்தை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென சிறுமியின் ஸ்கூட்டரை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இதனைய‌டுத்து உடனடியாக உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மர்ப நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unknown shoot killed school girl madhya Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->