நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்து உள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவுகள் எரிப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் உண்டாகும் புகையால் டெல்லியில் காற்றின் மாசு அதிகரிக்கிறது. 

ஏற்கனவே குழந்தைகள் நல ஆணையம் பள்ளிகளை திறக்க வேண்டாம் என டெல்லி அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளார். காற்றின் தரம் சீராகும் வரை தொடக்க பள்ளிகள் திறக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் திறந்தவெளியில் நிகழ்ச்சியிலோ வகுப்பிலோ பங்கேற்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

டெல்லியில் இது போன்ற காற்று மாசு பிரச்சனை வரும் பொழுது ஆர்ட் & ஈவன் என்ற செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  நடப்பு ஆண்டில் இந்த திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று டெல்லி புறநகர் பகுதிகளில் தனியார் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unlimited holiday for primary schools in Delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->