'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினருக்கு நேரில் பாராட்டு தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே  தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தை  திரையிட தடை விதிக்க முடிவு செய்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார். அவருக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 

மேலும் இந்த திரைப்படத்தை அவருடன் துணை முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் ஆகியோர் திரைப்படத்தை பார்த்தனர். அதன் பின்னர் படக்குழுவினர் நேரில் சந்தித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார்.

ஏற்கனவே, உத்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP CM Yogi Adityanath wishes Kerala story movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->