சிதறும் காங்கிரஸ்., இன்று பாஜக.,வில் இணைந்த மூத்த தலைவர்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி முதல் ஐந்து உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. 

5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றாலும், நாடு முழுவதும் தற்போது பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீது அதிக கவனம் இருந்துவருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சி பிடிப்பார்? என்ற ஆவல் நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், உத்தரபிரதேச மாநிலத்தில் கட்சித்தாவல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். 

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரச்சார பீரங்கி என்றழைக்கப்பட்ட பிரியங்கா மௌரியா கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இப்படியாக பல கட்சி தாவல் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.என்.சிங் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று பாஜகவில் இணைந்து உள்ளார். 

தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை தலைமையகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில்,  ஆர்.பி.என்.சிங்கை மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து  பாஜகவில் இணைய வரவேற்றனர்.

பாஜகவில் இணைந்தது குறித்து ஆர்.பி.என்.சிங் தெரிவிக்கையில், "இது எனக்கான ஒரு புதிய தொடக்கம். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தலைமையின் கீழ், தேசிய கட்டமைப்பில் நான் நானும் தற்போது பங்கேற்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இதுபோன்ற கட்சித் தாவல்கள் அந்ததந்த கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP polls Congress RPN Singh JOINT TO BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->