உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
UP Train Accident Aug
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி அருகே சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு இன்று விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.
உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தின் அன்பாராவிலிருந்து ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையின் காரியார் பகுதிக்கு நிலக்கரி சரக்கு ரயில் ஒன்று இன்று சென்றது.
வாரணாசி மாவட்டத்திற்குட்பட்ட சக்திநகர் அருகே வந்தபோது, ரயிலின் இரு பெட்டிகள், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பெட்டிகளில் நிலக்கரி மட்டுமே இருந்ததால், இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், உத்தரபிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியை நம்பி, ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பில்பூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா- அமிர்தசரஸ் செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் தீயை அணைக்கும் கருவியை சிலர் பயன்படுத்த, சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக எண்ணி உயிரை காப்பற்றிக்கொள்ள ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.
இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.