ஜி20 மாநாடு || முதன்முறையாக இந்தியா வந்தடைந்தார் ஜோ பைடன்! - Seithipunal
Seithipunal


ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு இந்தியா ஜி20 உறுப்பு நாடுகளில் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை என அறிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

அதன்படி நேற்று அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் வரவேற்றார். அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் பைடனை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடியை ஜோ பைடன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா அமெரிக்கா இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Joe Biden arrives in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->