இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க அமெரிக்கா ஆதரவு.! - Seithipunal
Seithipunal


உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் சீர்த்திருத்தப்பட்ட கவுன்சிலில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளை உறுப்பினராக சேர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடடன் ஆதரவு தெரிவித்தவுடன், இதற்காக வரலாற்று ரீதியாக அமெரிக்கா பின்னால் நிற்கும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொலம்பியா யூனிவர்சிட்டியில் நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் இந்தியாவுக்கு மட்டுமல்ல சர்வதேச அமைப்புகளுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2030ல் இந்தியா உலகத்தில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US supports India permanent membership of UN Security Council


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->