இந்தியாவின் இந்த பகுதிக்கு போகாதீங்க! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை1 - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு பயணம் செய்யும் அமெரிக்க நாட்டு மக்கள், மணிப்பூர் மற்றும் ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க நாட்டு வலியுறுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிக அளவில் இருப்பதால், அமெரிக்கா இந்த எச்சரிக்கையை அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துள்ளது. 

மேலும் அமெரிக்கா நாட்டு அரசு அந்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தீவிரவாதம் மற்றும் குற்றம் அதிகம் காணப்படுவதால், அந்தப் பகுதிகளுக்கு செல்வோர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். 

சில பகுதிகளில் மிக அதிகமான அபாயம் உள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம். அந்த பகுதிகள் தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியான நிலையில் உள்ளது. 

இதேபோல் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளான மணிப்பூர் பகுதிக்கும் செல்ல வேண்டாம். அங்கு வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக உள்ளது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. 

எனவே சுற்றுலா தளங்கள், பேருந்து, விமானம், ரயில் நிலையங்கள், சந்தை பகுதிகள், அரசு சேவை வழங்கும் பகுதிகளில் சுற்றுலா வரும் பயணிகளை சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க நாட்டு அரசு வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA Alert US People to India Visit Safety


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->