'ஏழுமலையானுக்கே நாமம்..' - போலி ஆதார் கார்டு மூலம் 20 முறை 'சுப்ரபாத தரிசன' டிக்கட் பெற்ற நபர் கைது..!! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 'சுப்ரபாத தரிசனம்' டிக்கட்டை போலி ஆதார் கார்டு மூலம் 20 முறை பெற்று தரிசனம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வழக்கமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் ஒவ்வொரு பக்தர்களிடமும் தேவஸ்தான அதிகாரிகள் டிக்கட்டுகளை சோதனை செய்த பிறகு தான் அவர்களை தரிசனத்திற்கே அனுமதிப்பார்கள். அந்த வகையில் இன்று  வியாழக்கிழமை அதிகாலையில் சுப்ரபாத சேவைக்காக வந்த பக்தர்களிடம் டிக்கட்டுகளை சோதனை செய்தபோது, ஒருவர் போலி ஆதார் கார்டுடன் தேவஸ்தான அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார். இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் அந்த நபரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். 

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், போலி ஆதார் கார்டை உபயோகித்து தரிசன டிக்கட் வாங்கிய அந்த நபர் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்றும், இவர் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் ஆன்லைன் குலுக்கல் முறையில் அதிகாலை 'சுப்ரபாத சேவை தரிசன' டிக்கட்டை பல முறை வங்கியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த இந்த நபர் கடந்த சில மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 முறை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் இந்த குலுக்கலில் பங்கேற்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அதில் இதுவரை அவர் 20 முறை இந்த அதிகாலை 'சுப்ரபாத சேவை தரிசன' டிக்கட்டை போலி ஆதாரைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அந்த நபரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Using Fake Adhar Card A Man Get Subrapatha Dharshan Ticket 20 Times Got Arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->