குடியரசுத் தின விழா : அலங்கார ஊர்திகளில் முதல் பரிசைத் தட்டித் தூக்கிய உத்தரகாண்ட் !  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசுத் தின விழா நாட்டின் தலைநகரான டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் மற்றும் விமானங்களின் சாகசம் என்று அனைத்தும் இடம்பெற்றன. 

அந்த, அலங்கார ஊர்திகளில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இதில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள், பறவைகள், கார்பட் தேசிய பூங்காவின் கலைமான், கஸ்தூரி மான் இனங்கள், தேசிய பறவை மயில், கோரல் பறவை மற்றும்  பழங்கால கோயில்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. 

அதேபோல், விழாவில் பங்குபெற்ற பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் காலாட் படை, பஞ்சாப் படைப் பிரிவு, மராத்தா படைப் பிரிவு, டோக்ரா படைப் பிரிவு, பிஹார் படைப் பிரிவு மற்றும் கூர்கா படைப் பிரிவுகள் கலந்து கொண்டனர். அதில், துணை ராணுவப் படைகளில், ரிசர்வ் போலீஸ் படை முதல் பரிசை வென்றது. 

அதுமட்டுமல்லாமல், மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்த்திகள் பங்கேற்றனர். அதில், பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி சிறப்பு பரிசை வென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar kant first price for decoration car in republic day


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->