'நீட்' மாணவர்களின் ரகசியங்களை விற்று காசு பார்த்த கும்பல்.! சினிமாவை மிஞ்சும் பேரதிர்ச்சி சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


அந்தரங்க தகவல்கள் திருட்டு மற்றும் விற்பனை குறித்து ஹைதராபாத்தில் இருக்கும் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அந்த 7 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 நிறுவனங்களை ஏற்பாடு செய்து வைத்து பொதுமக்களின் செல்போன் எண்கள், ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை திருடி அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

 

இதுவரை 16 கோடியே 80 லட்சம் தனிநபர்களின் விவரங்களை திருடி அவர்கள் விற்று காசாக்கி இருப்பது காவல்துறையை அதிர வைத்துள்ளது. 

அந்த 7 பேரிடம் இருந்து செல்போன்கள், ஆதார் அட்டைகள் மற்றும் திருடப்பட்ட தகவல் குறித்த ஆவணங்கள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh 7 member of team selling personal data for money


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->