உ.பி : காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமரா திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல்.!
uttar pradesh govt approves to cctv camera fit on all police station
உ.பி : காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமரா திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல்.!
உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமரா பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசு தெரிவித்துள்ளதாவது:- "இதற்கு முன்னதாக இந்த கேமரா பொருத்தும் திட்டத்திற்கான செலவாக ரூ.359 கோடியாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தொகை ரூ.144.90 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் தரவுகள் பன்னிரெண்டு மாதங்கள் வரை சேமித்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காவல்துறையின் மீதான வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
English Summary
uttar pradesh govt approves to cctv camera fit on all police station