போலி நிதி அறிக்கை! பல கோடி வங்கியிடம் கடன்! எண்ணெய் நிறுவனத்தின் ரூ.814 கோடி சொத்து முடக்கம்! - Seithipunal
Seithipunal


பணம் மோசடி வழக்கில் உத்தரபிரதேசம் எண்ணெய் நிறுவனத்தின் ரூ. 814 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஜெவிஎல் அக்ரோ லிமிட் நிறுவனம். எண்ணெய் உற்பத்தி செய்து மற்றும் விற்பனை செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் எண்ணெய் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜெவிஎல் அக்ரோ லிமிடெட் நிறுவனம் போலி நிதிநிலை அறிக்கை வங்கியிடும் சமர்ப்பித்து கடனை பெற்று தனது பல்வேறு நிறுவனங்களுக்கு நிதி வழங்கி உள்ளதாக புகார் எழுந்தது. இதற்கான நிறுவனத்தின் உரிமையாளர் போலியான இயக்குனர்களின் நிர்வகித்துள்ளார்.

இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் சத்திய நாராயணன் மற்றும் ஆதர்ஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சத்தியநாராயணன் மற்றும் ஆதர்ஷ் ஆகிய இரண்டு பேரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி குறித்து அமலாக துறை அதிகாரிகளுக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடத்தினர்.

தற்போது இந்த நிறுவனத்திற்கு சொந்தமான வாரணாசி பீகாரில் துரை டெல்லியின் பாலம் மற்றும் மகாராஷ்டிராவில் ராஜ்கிரிலுள்ள சுமார் 520 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ.814 கோடி என்று கூறப்படுகிறது. வாரணாசியில் செயல்பட்டு வந்த ஏவிஎல் ஆக்ரோ லிமிட் நிறுவனத்தின் சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கப்பட்ட சம்பவம் அந்நிறுவனத்தின் பணியாளர்களிடையே பெரும் அதிசயம் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Oil Company Rs 814 crores of assets were frozen by the Enforcement Directorate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->