சிறுநீரக கல்லை எடுக்க சொன்ன நோயாளியின் சிறுநீரகத்தையே திருடிய மருத்துவர்கள்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தை அடுத்த கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நக்லா தால் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அப்பகுதியில் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்துள்ளார். அந்த சோதனையில் சிறுநீர் குழாயில் கல் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஸ்கேன் சென்டரில் உள்ள நபர் ஒருவர் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டதாகவும் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்த சுரேஷுக்கு கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மீண்டும் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியை உள்ள மருத்துவரிடம் சிகிச்சையாக சென்ற பொழுது சுரேஷை தனியறையில் வைத்து சோதித்துள்ளார். சுரேஷின் வயிற்றில் தையல் போட்டிருப்பதை கண்டு கேள்வி எழுப்பிய மருத்துவரிடம் சிறுநீரக கல் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது வயிற்றை ஸ்கேன் செய்த போது இடதுபுற சிறுநீரகம் காணாமல் போனது தெரியவந்தது. சுரேஷின் சிறுநீரக கற்களை அகற்றுவதாக கூறி அவரது இடது பக்க சிறுவிகத்தையே திருடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுநீரகத்தை திருடியதும் இல்லாமல் அவருக்கு 28 ஆயிரம் ரூபாய் பில்லையும் வசூலித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh private doctors stole the patient kidney


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->