அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 'சார் தாம்' யாத்திரைக்கான VIP தரிசன தடை நீடிப்பு.!
Uttarakhand chief secretary extended ban VIP darshan
இந்துக்களின் புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தளங்களுக்கு யாத்திரையாக சொல்வது சார் தாம் என அழைக்கப்படும்.
இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பயணம் கடந்த பத்தாம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கியது முதல் நாள்தோறும் சுமார் 29 ஆயிரம் பக்தர்கள் கேதார்நாத் கோவிலை சுவாமி தரிசனம் செய்வதற்காக செல்கின்றனர்.
தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்வதாகவும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சார் தாம் யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சார் தாம் யாத்திரைக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் வருகின்ற 31ம் தேதி வரை விஐபி தரிசனத்திற்கு மாநில அரசு தடையை நீட்டித்துள்ளது.
இது குறித்து உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்திருப்பதாவது, யாத்திரை செல்லும் பாதைகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புனித தலங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Uttarakhand chief secretary extended ban VIP darshan