முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு இட ஆக்கிரமிப்பு நோட்டீஸ், முனிசிபல் கார்ப்பரேஷன் அதிரடி நடவடிக்கை !!
vadodara municipal corporation sends notice to yusuf pathaan
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆளும் வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட பகுதியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யுமான யூசுப் பதானுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி அந்த பகுதி முனிசிபல் கார்ப்பரேஷன் நோட்டீஸ் அவருக்கு அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 6 ஆம் தேதி யூசுப் பதானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகளில் முன்னாள் ஆல்ரவுண்டர் பதான் பஹரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் பதானுக்கு நிலத்தை விற்க வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் முன்மொழிவை மாநில அரசு நிராகரித்த போதிலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி யூசுப் பதான் அந்த இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
TP 22 இன் கீழ் தனடால்ஜா பகுதியில் உள்ள ஒரு ப்ளாட் வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான குடியிருப்பு ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டில், யூசுப் பதான் வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனிடம் இந்த இடத்தைக் கோரியிருந்தார். அவர் ஒரு சதுர மீட்டருக்கு கிட்டத்தட்ட 57,000 ரூபாய் வழங்குவதாக கூறி உள்ளார்.
யூசுப் பதானால் அனுப்பப்பட்ட முன்மொழிவு நிராகரிக்கப்பட்டாலும், வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன், நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கவில்லை. ஆனால், பதான் அந்த இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மாநகராட்சியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
978 சதுர மீட்டர் நிலத்தை பதானுக்கு விற்க மாநில அரசு ஒப்புதல் வழங்க வில்லை, மேலும் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
English Summary
vadodara municipal corporation sends notice to yusuf pathaan