வந்தே பாரத் ரயில் விபத்து | முன்பகுதி சேதம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
Vande Bharat train damaged
புதிய இந்தியாவில் அதிநவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை உள்நாட்டிலேயே நாம் தயாரித்து வருகிறோம். இந்த ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், வரும் ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏற்கெனவே புது டெல்லி - வாராணசி, புது டெல்லி - ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவதாக காந்தி நகருக்கும் - மும்பைக்கும் இடையே ரயில் இயக்கப்படவுள்ளது. சா்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும், விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
முழுவதும் ஏசி வசதி பெட்டி, தானியங்கி கதவு, தானியங்கி விளக்கு, மொபைல் சாா்ஜ், கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இந்த ரயில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் விபத்தில் சேதமாகியுள்ளது. வத்வா மற்றும் மணிநகர் இடையே சென்ற ரயிலின் குறுக்கே கால்நடை வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயில் முன் பகுதியில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Vande Bharat train damaged