வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு நடத்திய கும்பல்! ஆய்வாளர்கள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

உத்தரபிரதேசம்: கோரக்பூரிலிருந்து லக்னௌ நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், பாரபங்கியில் உள்ள சபேதாபாத் ரயில் நிலையம் அருகேவந்த போது ரயில் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலால் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எந்த வகையிலும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. 

இந்த சம்பவம் பிரதமர் நரேந்திர மோடியின் ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் மெய்நிகர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் கல்வீச்சு தொடா்பாக துணைக் குழு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததில்  ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் ஆய்வாளர்கள், அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்கும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

இதனை அடுத்து அடையாளம் தெரியாத நபர்களிடம் பாரபங்கியின் ரயில்வே போலீசார் விசாரணையை நடத்தினர்.
அயோத்தியில் கடந்த மாதம் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசிய தாக்குதல் நடந்தது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயிலை முதன் முதலில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

வந்தே பாரத், மத்திய பாஜக அரசின் முக்கிய ரயில்வே திட்டங்களில் ஒன்றாக முன்னிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் வந்தே பாரத் ரயிலைக் நாட்டின் சில இடங்களில் குறிவைத்து  கல்வீச்சு நடத்தும் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Bharat train gang pelted stones


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->