வந்தே பாரத் விரைவு ரயில் சக்கரம் பழுது - ஆறு மணி நேரமாக பயணிகள் தவிப்பு!
Vande Bharat train late
நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், வரும் ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தபடி, புது டெல்லி - வாராணசி, புது டெல்லி - ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முழுவதும் ஏசி வசதி பெட்டி, தானியங்கி கதவு, தானியங்கி விளக்கு, மொபைல் சாா்ஜ், கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.
சா்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும், விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி வாரணாசி இடையே இயக்கப்பட்டபோது சக்கரங்கள் பழுதடைந்து வழியிலேயே ‘வந்தே பாரத்’ ரயில் நின்றதன் காரணமாக, ஆறு மணி நேரமாக பயணிகள் தவித்தனர்.
ஏற்கனவே, முதல் நாள் எருமை மாடு மோதியும், இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் இந்த ரயில் சேதமடைந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று சக்கரம் பழுதாகி பயணிகளை தவிக்க விட்டுள்ளது.
எருமை மாடு மோதிய விபத்து புகைப்படங்கள் :