வாரணாசி | சிவன் தோற்றத்தில் உருவாகும் கிரிக்கெட் ஸ்டேடியம்! அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், பிரதமர் மோடியின் தொகுதியும் ஆன்மீக சிறப்பும் வாய்ந்த வாரணாசியில் மற்றொரு சிறப்பு அம்சமாக கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளது. 

இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதிகள் வருகின்ற 23ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த மைதானம் சுமார் ரூ. 450 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. 

31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் டிஸ்ப்ளே, ஸ்கோர் போர்டு, பிளட் லைட்டுகள், விஐபி ஓய்வு அறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைய உள்ளது. 

இந்த மைதானம் குறித்து உத்திர பிரதேச கிரிக்கெட் சங்க இயக்குனர் தெரிவிக்கையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் பார்க்கலாம் என்றார். 

இந்த மைதானம் இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் போன்றவற்றின் பங்கேற்புடன் அமைய உள்ளது. 

மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 120 கோடி வரையில் செலவு செய்து நிலம் கையகப்படுத்தியுள்ளது. இந்த மைதானமானது சிவனின் தலையில் இருக்கும் பிறை போலவும், உடுக்கை போன்று நுழைவு பகுதியும், சூலாயுதம் போல மின்விளக்கு கம்பங்களும் அமைக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varanasi cricket stadium pm modi lay stone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->