நெகிழ்ச்சி... விவசாயி காலில் விழுந்து ஆசி பெற்ற குடியரசு துணை தலைவர்!  - Seithipunal
Seithipunal


குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், கோவாவில் 94 வயதுடைய விவசாயியின் காலைத் தொட்டு ஆசி பெற்றார். 

கோவா ஆளுநர் எழுதிய 200 வது நூல் வெளியீட்டு விழா அவரது மாளிகையின் தர்பார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். 

இதற்கு முன்னதாக, கூட்டத்தினர் மத்தியில் மேடையை நோக்கி சென்ற தன்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த 94 வயது மதிக்கத்தக்க ஒரு விவசாயியை பார்த்து அவரது அருகே சென்றார். 

பின்னர் அவருடன் சில நிமிடங்கள் தன்கர் புன்னகையுடன் பேசிவிட்டு விவசாயியின் காலை தொட்டு ஆசி பெற்றார். அப்போது ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளையும், முதல்வர் பிரமோத் சாவந்தும் உடன் இருந்தனர். 

''குடியரசு துணைத் தலைவரின் இந்த செய்கையால் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆளுநரின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன். ஆளுநர் மாளிகைக்குள் வந்தது இதுவே முதல் முறை'' என விவசாயி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice President fell farmer feet and was blessed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->