குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சுதந்திர தின வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த வாழ்த்து அறிக்கையில், "கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமக்கு இந்த சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. 

ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் தான் சுதந்திர தினம். 

நம் இந்தியா இன்று அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக செயல்பட்டு வருகிறது. 

தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிக்கும் வகையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. 

அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice President Jagdeep Dhankhar wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->