விழுப்புரம் | ரூ.32 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி! அமைச்சர்கள் முன்னிலை! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு முதல்  அப்பம்பட்டு பகுதி வரை சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் புதிய சாலை அமைக்க திட்டமிட்டிருந்தனர். 

அதுபோல் சுமார் ரூ.32 லட்சத்தில் அந்த பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். மேலும் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். 

பூமி பூஜை நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram road construction work rs32 lakhs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->