மோசடி வழக்கில் விரேந்தர் சேவாக்கின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செக் மோசடி வழக்கில்கைதாகியுள்ளார். ஜல்தா புட் மற்றும் பெவரேஜஸ் நிறுவனத்தை வினோத் சேவாக், விஷ்ணு மிட்டல் மற்றும் சுதீர் மல்ஹோத்ரா ஆகிய மூவரும் நடத்துவதோடு, இயக்குநர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மோகன் என்பவரின் ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிறுவனத்திற்காக பொருட்கள் வாங்கி உள்ளனர். அதற்காக இவர்கள் கிருஷ்ணா மோகனுக்கு ரூ.7 கோடி செக் கொடுத்துள்ளனர். அந்த செக்கை வங்கியில் கிருஷ்ணா மோசன் டெபாசிட் செய்துள்ளார். அப்போது, அந்த செக் பவுன்ஸாகி உள்ளது.

இதற்கான காரணம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்பது தெரியவந்த நிலையில், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட 03 பேர் மீதும் நீதிமன்றத்தில் கிருஷ்ணா மோகன் வழக்கு தொடுத்திருந்தார்.

ஆனால், குறித்த மூவரும் இந்த விசாரணைக்கு ஆஜாராகாத நிலையில், 2023-ஆம் ஆண்டு காவல்துறையினர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில்,02 ஆண்டுகளுக்கு பின் குறித்த வழக்கில் வீரேந்தர் சேவாக்கின் சகோதர் வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virender Sehwags brother has been arrested in the cheating case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->