#விருதுநகர் | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது! - Seithipunal
Seithipunal


விருதுநகர்:கல்லூரணி பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.   

தகவலின் பெயரில், திருச்சுழி துணை போலீஸ் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கல்லூரணி பகுதிக்கு திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து திருச்சுழி அருகே உள்ள மாங்குளம் பகுதிக்கும் போலீசார் சோதனை நடத்த சென்றனர், அப்போது அந்த பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன், அவரின் மனைவி தாடகநாச்சியார் (வயது 36) போலீசாரை வருவதை கவனித்து கொண்டிருந்தனர். 

இதனை பார்த்த போலீசார், தாடக நாச்சியார் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அவர் மீது பல வழக்குகள் இருந்தது தெரியவந்தது. 

இதனால் போலீசார்,அவரை சந்தேகத்தின் பெயரில் சோதனைசெய்தனர். அப்போது அவர் பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். 

நட்சியரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கஞ்சா பொட்டலங்களை அங்குள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்து வந்தது அம்பலமாகியது. மேலும் இவர் கல்லூரணி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, தாடக நாச்சியார் மீது வழக்கு பதிவு செய்த திருச்சுழி போலீசார் அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthunagar kanja saler arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->